Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டையில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி, ரேசன்கடை கட்டிடங்களுக்கு பூமிபூஜை துவங்கி வைத்தனார்

ஜனவரி 06, 2023 07:57

செங்கோட்டையில் ரூபாய் சுமார் 20லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி, ரேசன்கடை கட்டிடங்களுக்கு பூமிபூஜை எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா துவக்கி வைத்தார்.


செங்கோட்டை: செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 20லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம், 12வது வார்டு கேசி.ரோடு பகுதியில் புதிய ரேசன் கடை அமைக்க பூமிபூஜை துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமைதாங்கினார். நகராட்சி ஆணையாளா் (பொ)ஜெயப்பிரியா, நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

பொறியாளா் பிரிவு மேற்பார்வையாளா் காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார் அதனைதொடா்ந்து சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா கட்டிட பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், அவைத்தலைவா் வீ.பி.மூர்த்தி, நகரச்செயலாளா் கணேசன்,நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்