Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழுநீர்குளத்தில் வாழைப்பழத்தின் உறை இடுதல் குறித்து வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்

பிப்ரவரி 07, 2023 07:46

பாவூர்சத்திரம் : தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக கழுநீர்குளம் கிராம  மக்களுக்கு  வாழைப்பழத்தின் உறை இடுதல் பற்றி செயல்முறை விளக்கமாக வழங்கப்பட்டது .

இதன் வழிமுறைகளானவை சணல் பை அல்லது பாலித்தீன் பைக் கொண்டு வாழைக்குலையை மூடுவதால் அதிக சூரிய ஒளி , காற்று மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்கலாம்.வாழைக்குலையை மூடுவதன் மூலம் வாழைகாய்களுக்கு செழிப்பான பச்சை நிறம் கிடைக்கிறது . மேலும் பூச்சி தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்