Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயமும் தொழில்நுட்பமும்: இராசயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை 

பிப்ரவரி 09, 2023 06:49

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வேளாண் பட்டதாரி மாணவன்.....

அன்புக்குரிய விவசாய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் நான் வா.யுவராஜ் , இளங்கலை வேளாண் பட்டதாரி மாணவர்.ஆதமங்கலம் புதூர், திருவண்ணாமலை மாவட்டம். பயிர்களில் அதிகமாக பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.

அதை இராசயன உரம் பயன்படுத்தாமல் எளிய முறையில் கட்டுப்படுத்தலாம்.இராசயன உரத்தில் இருந்து மண்ணை பாதுகாக்கலாம்.நெல் வயலில் தாக்கும் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு.நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும்.

நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும்.நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.

I’ வடிவ மூங்கில் கழிகளை நெல் வயலில் பல இடங்களில் வைத்தால், பறவைகள் உட்கார்ந்து, நெல்லில்தாக்கும் பூச்சிகளின் புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.நெல்லில் உள்ள பூச்சி இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம்புண்ணாக்கு சாற்றை தெளிக்கவேண்டும்.இலை மடக்குப்புழு தாக்கிய வயலில், நாட்டு இலந்தை அல்லது அயிலை தாவர கிளையை புதைக்கவேண்டும்.

நெல்லில் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, நீருடன் வேப்பெண்ணெய் 30 மிலி / லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த, 10 கிலோ பசுமாட்டு சாணி சாம்பலுடன் 2 கிலோ சுண்ணாம்பு தூள் மற்றும் 1 கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவவேண்டும்.

கதிர் நாவாய் பூச்சியின் சேதாரத்தை கட்டுப்படுத்த, 100 மிலி கருவேல் இலை சாற்றுடன் 10 கிலோ சாணியுடன் 10 லி தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும். தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, எருக்களைச் செடியை 12 அடி இடைவெளியில் நெல் வயலின் எல்லாப்புறமும் வளர்க்கவோ, நடவோ செய்யலாம்.

வேர் அழுகல் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் இலைகளைப் போட்டால் தானிய சேமிப்பு கிடங்கில் ஏற்படும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நெல்மணிகள், சேமிப்பதற்கு முன்பு, நெல்மணியுடன் புங்கம், நொச்சி மற்றும் வேம்பு இலைகளைக் கலந்தால் பூச்சித் தாக்கலை தடுக்கலாம்.இதனை சரியான முறையில் செயல்முறைப்படுத்தினால் விவசாய மக்களுக்கு இது மாபெரும் உறுதுணையாக நின்று இந்த பாதுகாக்கும் முறை இருக்கும் என தெரிவிக்கிறேன்.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்  என்று திருக்குறள் கூறி நன்றி வணக்கம்!

தலைப்புச்செய்திகள்