Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்காட்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல் விளக்கம்

பிப்ரவரி 17, 2023 02:12

மல்லசமுத்திரம் : மாமுண்டி கிராமத்தில், மக்காட்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் பூஞ்சானம் குறித்த செயல் விளக்கத்தினை வேளாண் தனியார் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின்கீழ், விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.


இதுகுறித்து நாமக்கல் பி.ஜி.பி.,தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் கூறியது...
அமெரிக்கன் படைப்புழுவானது, பயிரின் அனைத்து வளர்ச்சி நிலையிலும் செடியின் அனைத்துப் பாகங்களையும் தாக்குகிறது. மீளமுடியாத வகையில் சேதம் மிக விரைவாக உருவாகிறது. அமெரிக்கன் படைப்புழுவால் உண்டாகும் மகசூல் இழப்புகள் 60% வரை இருக்கலாம். 


இப்படைப்புழுவை கட்டுப்பத மெட்டாரைசியம் பூஞ்சானம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.  இது மக்காட்சோளத்தை தாக்கும் படைப்புழு மட்டுமல்லாமல் காண்டாமிருவண்டு, வெள்ளைஈ, கூன்வண்டு, மாவுபுச்சி, அசுவினி, இலைபேன், சிலந்திபேன், உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்தக்கூடியது.

மேலும்,  மக்காட்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கர் ஒன்றிற்க்கு நான்கு கிலோ வீதம் பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த எரு குழியில் உள்ள வண்டுகளின் இளம் புழுக்களை அழிக்க 250கிராம் மெட்டாரைசியத்தினை 750மி.லி. தண்ணிரில் கலந்து எரு குழியில் தெளிக்க  வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை தாக்கும் வேர்வண்டுகளை கட்டுப்படுத்திட 200கிராம் மெட்டாரைசியத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.


படவிளக்கம் : மல்லசமுத்திரம் அடுத்த, மாமுண்டி கிராமத்தில், மக்காட்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல் விளக்கத்தினை, தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

தலைப்புச்செய்திகள்