Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசைத்தறி தொழிலாளர் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை

பிப்ரவரி 27, 2023 12:07

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் கே.பி.பழனியப்பா திருமண மண்டபத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. AICCTU ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம் 80 சதவீத முன்வைக்கப்பட்டது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் 75% முன் வைக்கப்பட்டது. AITUC 75 %சதவீதம் முன்வைக்கப்பட்டது


இதில் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் 3 சதவீதம் தருவதாகவும், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுங்கள் என்ற கோரிக்கை வைத்தனர். ஆனால்  தொழிற்சங்கங்கள் சார்பில் உறுதியாக கூலி உயர்வு எப்பொழுது முடித்து தருவீர்கள் என்று கேட்கபட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள முடித்துக் கொள்ளலாம் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 15 ஆம் தேதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்தனர். ஆகையால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கான தகவல்களை தொழிலாளர் இடத்தில் எடுத்துக் கூறுகின்றோம் என்று கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்கள் P.S.K.கந்தசாமி தலைமையில் தொழிற்சங்க தலைவர்களும், AICCTU, மாநிலச் செயலாளர் எஸ் சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் என் வெங்கடேசன், ஆவத்தி பழைய பொறுப்பாளர் நாகராஜ், தழ.பச்சையம்மாள், CITU அசோகன், தோழர் குமார், அங்கமுத்து, AITUC  செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்