Sunday, 9th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மார்ச் 14, 2023 07:37

எட்டயபுரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டையபுரம் நகர குழுவின் சார்பில்  பேருந்து நிலையம் முன்பாக நகர செயலாளர் முனியசாமி தலைமையில் நகர பொருளாளர் குருநாதன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்  நல்லையா தொடங்கிவைத்தார். மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி  சோலையப்பன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர் ரவீந்திரன்,  ஏஐடியுசி  ஆட்டோ சங்க தலைவர் காளிராஜ் ,வேன் ஓட்டுநர் சங்க தலைவர் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

விஷம் போல் ஏறி வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், எட்டயபுரம் நகரில் அனைத்து வார்டுகளிலும் கலப்படம் இல்லாத சீவலப்பேரி குடிநீர் வழங்கப்பட வேண்டும்,

எட்டயபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அமைத்திட வேண்டும், எட்டையபுரம் தாலுகா கிராமங்களில் உள்ள அரசு உபரி நில ஆக்கிரமிப்பு ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வார்த்தைகளும் அடிப்படை வசதி அத்தியாவசிய கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்