Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள்: காவிரி உபரிநீர் சேமிப்புத் திட்டம் அவசியம்

மார்ச் 27, 2023 01:24

தர்­ம­புரி: தமிழ்­நாட்­டில் காவிரி உப­ரி­நீர் சேமிப்­புத் திட்­டத்தை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தும்­படி விவ­சா­யி­கள் அர­சாங்­கத்­திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்­பாக தர்­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்த விவ­சா­யி­கள் தங்­க­ளு­டைய அந்த நீண்­ட­கால கோரிக்­கையை நிறை­வேற்ற அர­சாங்­கம் தவ­றி­விட்­டது தங்­களுக்­குப் பெரிய ஏமாற்­ற­மா­கப் போய்­விட்­டது என்று வருத்­தம் தெரி­வித்­த­னர்.

சட்­ட­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட 2023-24 வேளாண்மை வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் காவிரி உப­ரி­நீர் சேமிப்­புத் திட்­டம் இடம்­பெ­றா­மல் போனது தங்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­மா­கி­விட்­டது என்­றும் அவர்கள் கூறி­னர்.

அந்­தத் திட்­டத்­தின்­படி மழைக்­கா­லத்­தில் காவி­ரி­யில் பெருக்­கெ­டுத்து வரும் உப­ரி­நீரை ஏரி­களுக்­கும் குளம்­குட்­டை­க­ளுக்­கும் திருப்­பி­வி­டு­வது இலக்கு. அப்­படிச் செய்­வ­தால் நிலத்­தடி நீர்­மட்­டம் உய­ரும்.

ஆனால், அர­சாங்­கம் இது­வரை­யில் எந்­த­வோர் அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை என்று விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­தனர்.

இத­னி­டையே, இது பற்றி கருத்து கூறிய தமிழ்­நாடு விவசாயி­கள் சங்­கத் தலை­வர் சின்­ன­சாமி, காவிரி உப­ரி­நீர் சேமிப்­புத் திட்­டம் உட­ன­டி­யா­கத் தேவைப்­படும் ஒன்று என்று வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

குறிப்­பாக தர்­ம­புரி மாவட்­டத்­தைப் பொறுத்­த­வரை மழை ஒன்­று­தான் தண்­ணீ­ருக்­கான வழி­யாக இருக்­கிறது.

சென்ற ஆண்டு அதிக மழை பெய்­த­தால் நீர்­நி­லை­கள் நிரம்­பின. ஆனால், இந்த ஆண்­டும் அதே சூழ்­நிலை இருப்­ப­தற்கு உத்­த­ர­வா­தம் இல்லை.

ஆகை­யால், மாநி­லம் முழு­வ­துமே இந்­தப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

தலைப்புச்செய்திகள்