Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி 

ஏப்ரல் 10, 2023 06:36

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, கொல்லிமலை, பரமத்தி வேலூர், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கின்றனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். 


கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, அப்பளம் போன்ற பொருட்கள் மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் பல வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்குகளை கொள்முதல் செய்கின்றனர்.

மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து பாயிண்ட் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு 500க்கு விற்பனையானது.

தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்து ரூ.14 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கோடை காலம் துவங்கியுள்ளதால் மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தலைப்புச்செய்திகள்