Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12 லட்சம்  மதிப்பிலான நெற்பயிர்கள் சேதம்

ஏப்ரல் 18, 2023 02:01

வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் சேவல்  பகுதியில் 30 ஏக்கரில் சுமார் ரூபாய் 12 லட்சம்  மதிப்பிலான நெற்பயிர்கள் சேதம். நெல்கட்டும் சேவல் மாமன்னன் பூலித்தேவரின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி என்பவருக்கு சொந்தமான  மொட்டமலை அருகே உய்யாக்குளம் கண்மாய் பாசனம் பகுதியில் சுமார் 30 ஏக்கரில் நன்சை வயல் பகுதியில் உள்ளது.

அதில்நெல் பயிர்கள் கடந்த புரட்டாசி மாதம்  பயிரிட்டுள்ளனர். இதில் நெடற்பயிர்களுக்கு விதைத்ததில் இருந்து தற்போது அறுவடை காலம் வரை சுமார் 11 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்களை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த மழையினால் அறுவடை தாமதம் படுத்தப்பட்டது. மீண்டும் வயல்வெளிகளில் தண்ணீர் வடிந்த பின்பு அறுவடை செய்ய நேற்று முன்தினம் வயல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

வயல் பகுதியில் விவசாயத்தை கவனித்து வரும்  பாண்டியராஜா நெற்பயிர்களை கண்டவுடன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் உய்யா குளம் மேற்கே மொட்டமலை பகுதியில் உள்ள  சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகளும்,   அரியவகை மான்களும் நெற்பயிர்களை தின்றும்,   வயல் பகுதியில் புகுந்து, உருண்டு விளையாடியும் நாசம் செய்துள்ளது.

இதுகுறித்து வயலின் உரிமையாளர் கோமதி முத்துராணி துரைச்சி வாசுதேவநல்லூர் வேளாண்மை துறை பொறியாளர் அவர்களுக்கும், நெற்கட்டும் சேவல் கிராம நிர்வாக அலுவலருக்கும், சிவகிரி வருவாய் வட்டாட்சியர் அவர்களுக்கும், புளியங்குடி வனத்துறை அதிகாரிகளுக்கும், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அவர்களுக்கும், தென்காசி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும்  நேரடியாக அலுவலகத்திற்கும் சென்று விலங்குகளால்  சேதப்படுத்தப்பட்ட  பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு வரை இங்கு ஒரு ஏக்கருக்கு 30 மூடை நெல் விளைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த நெற்பயிர்கள் தரையோடு தரையாக சிதறி கிடக்கின்றன. மேலும் வைக்கோலுக்கு  பயன்பட முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்று சேதங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலங்குகளை தகுந்த பாதுகாப்புடன் காட்டுப்பகுதி கொண்டு சேர்த்து விடுமாறும் விவசாயிகளில் வாழ்வாதாரத்தை பாதிக்காத அளவு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியில் உள்ள விவசாயிகள்  தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் .

தலைப்புச்செய்திகள்