Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடையம்பெரும்பத்து ஊராட்சியில் கழிவு நீர் வாருகால் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

மே 11, 2023 11:19

கடையம்:கடையம்பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் 14 குக்கிராமங்களும், சுமார் 3 ஆயிரம் வீடுகளும் உள்ளது. இதில் வெய்க்காலிப்பட்டி மற்றும் அருந்ததியர் காலனி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.  கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரம் ஊராட்சியைச் சேர்ந்த தெற்குமாலைசூடிபட்டி, ரகுமானியாபுரம், வடக்குமாலைசூடிபட்டி, அரியப்பபுரம், அருந்ததியர்காலனி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையான வாருகால் இன்றி  வெய்க்காலிபட்டி, அருந்ததியர் காலனி பகுதியில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மழை காலங்களில் வீடுகளிலும்கழிவு நீர் புகுந்து விடுகிறது. 
எனவே  எனவே பெர்துமக்கள் நலன் கருதி அரியப்பபுரம் ஊராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பாதுகாப்பாக கொண்டு செல்ல சிமெண்ட் வாருகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்