Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா தேரோட்டம்

மே 19, 2023 12:28

கயத்தாறு:கங்கை கொண்டான் துறையூர் கிராமத்தில் புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 5/5/2023 அன்று கொடிஏற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மாலை சிறப்பு சொற்பொழிவு, ஆராதனை திருப்பலி,நற்கருணை ஆகிய சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து.அன்று முதல் தினமும் காலை மாலை சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து 9 வது திருநாளன்று இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இரவு 10 .30 மணிக்கு புனித குழந்தை திருநாள் சப்பரபவணியை பங்குத்தந்தைகள் சேர்ந்தமரம் பங்குத்தந்தை இம்மானுவேல் ஜெகன், எஸ்.அரள்ரவி, சங்கர் நகர் பங்குத்தந்தை அருள்மரியநாதன்ஆகியோர்  சப்ரபவணியை தொடங்கி வைத்தார். இரவு முழுவதும் பல்வேறு ரதவீதிகளில் பவணிவந்தது. பின்னர் 10 திருநாளான நேற்று காலை 10 மணிக்கு சப்பரபவணி தொடங்கி மாலை நான்கு மணிவரை வலம் வந்ததது.பக்தர்கள் வழிநெடுகிலும்சந்தனமாலை, எழுமிச்சை, ஆப்பிள், ஆரஞ்சு என பலதரப்பட்ட மாலைகள் அணிவித்தனர். உப்பு மிளகு வழங்கினார்கள், வானவேடிக்கையாக ஒருமணி நேரம் சிவகாசி குழுவினர் அதிரும் பட்டாசுகள்  போட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கொடி இறங்கியது.இத்திருத்தலத்தில் பக்தர்கள் அனைவரும் பல்வேறு நேத்திகடன்கள் செலுத்தினர்.இத்திருவிழாவிற்கு கங்கைகொண்டான் புளியம்பட்டி நாஞ்சாண்குளம் அலவந்தான்குளம் ஓட்டப்பிடாரம் மற்றும் வெளி மாவட்ங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாக கமிட்டியும் இறைமக்கள் மற்றும் புனித தெரேசாள் நற்பணி மன்றம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

 

தலைப்புச்செய்திகள்