Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.6.50லட்சத்திற்கு பருத்தி ஏலம் 

ஜுன் 08, 2023 01:43

மல்லசமுத்திரம்:  மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.6.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 340 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், டி.சி.ஹெச்., ரகம் ரூ.6770 முதல் ரூ.7350 வரையிலும், பி.டி., ரகம் ரூ.6199 முதல் ரூ.7200 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3716 முதல் ரூ.4750 வரையிலும் என மொத்தம் ரூ.6.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. 

அடுத்த பருத்தி ஏலம் 14/06/2023 புதன்கிழமை நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்