Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் பெண்கள் சாலை மறியல்  

ஜுலை 03, 2023 07:06

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் ஒன்பதாவது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இது குறித்து வார்டு கவுன்சிலரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் கொட்டும் மழையில் காலி குடங்களுடன் முடங்கியார் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து மாணவ மாணவி வீடு செல்லும் நேரத்தில் சாலை மறியல் ஈடுபட்டதால் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிய சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொண்டு சென்று உடனடியாக உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்த பின்பு சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இராஜபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல் குடிநீர் பிரச்சனை நிலவுவதாகவும் அதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்