Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ. 4.15

ஜுலை 28, 2023 12:03


நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே நாளில் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இங்கு தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து, கடந்த ஜூலை 26ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.10 ஆனது.

இந்த நிலையில் என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்