Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அட்மா திட்டத்தில் பண்ணை பள்ளி வகுப்பு

ஆகஸ்டு 10, 2023 01:17

எலச்சிபாளையம்: தொண்டிபட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் மூலம் பண்ணைப்பள்ளி வகுப்பு நடந்தது.

எலச்சிபாளையம் வட்டாரம், தொண்டிப்பட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், 'நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' என்ற தலைப்பின்கீழ், விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து, மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம், நிலக்கடலை பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி ரேணுகாதேவி கலந்து  கொண்டு, விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் பற்றி விளக்கமளித்தார்.

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை துணைஅலுவலர் முருகவேல் கலந்துகொண்டு, உயிர்உர விதை நேர்த்தி முறைகள் மற்றும் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் உதவி வேளாண்மை அலுவலர் ராஜதுரை கலந்து கொண்டு மத்திய, மாநில திட்டங்கள் மற்றும் உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

மேலும் ஏற்பாடுகளை, வட்டார தொழில் நுட்ப மேலாளர் திவாகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்