Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என நகர மன்ற தலைவர் அறிவுறுத்தல்

ஆகஸ்டு 14, 2023 11:18

குமாரபாளையம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க‌. ஸ்டாலின்  
அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் நகராட்சியில் 
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்கப்பட்டு எனது குப்பை எனது பொறுப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நகரப் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 33 வார்டுகளிலும் தினசரி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரக்கிடங்கு மூலம் உரங்கள் தயாரித்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 

மேலும் தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் சாக்கடை சுத்தம் செய்தல், தேவையில்லாத புல் பூண்டு அகற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
 

அதன்படி  நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் மணிமேகலை தெரு நீர் நிலைகளான ஆற்றங்கரை படித்துறை சுத்தம் செய்யப்பட்டு, மரம் நடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர மன்ற தலைவர்.த. விஜய்கண்ணன் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளான ஆற்றங்கரை, கோம்பு பள்ள ஓடை ஆகியவற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட கூடாது எனவும் வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் குமாரபாளையம் நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஜான் ராஜா 20வது வார்டு ஞானசேகரன், நகர மன்ற உறுப்பினர் இனியா ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்