Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து, உண்ணாவிரத அறப்போராட்டம் 10  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆகஸ்டு 21, 2023 12:24

நாமக்கல்: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக மாணவர் அணி செயலாளர், கழக மருத்துவ அணி செயலாளர் ஆகியோரின் கூட்டு அறிக்கைக்கிணங்க, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நாமக்கல் நகரம், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்கா சாலையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினா். 

சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, கழக தீர்மான குழு துணை தலைவர் பார். இளங்கோவன், திராவிட மாடல் பாசறை பேச்சாளர் டான் அசோக், மாநில நிர்வாகிகள் சி.ஆனந்தகுமார்,  ப.ராணி அ.ரியா, முத்துவேல் இராமசுவாமி, எஸ்.ராஜேஸ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனா். 

நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றியக் கழகச் செயலாளர்கள் கே.பி.இராமசுவாமி, அ.அசோக்குமார், எம்.பி.கௌதம், கே.பி.ஜெகநாதன், வி.கே.பழனிவேல், பெ.நவலடி, பி.பாலசுப்பிரமணியன், ஆா்.எம்.துரைசாமி, எஸ்.செந்தில்முருகன்,  நகரச் செயலாளர்கள் என்.ஆா்.சங்கர், செ.பூபதி, ராணா.ஆனந்த், அ.சிவக்குமார், பேரூர் செயலாளர்கள் சி.செல்லப்பன், கு.அன்பழகன், ந.தனபால், பொன்.நல்லதம்பி, பெ.ஜெயக்குமார், ந.செல்வராஜ், க.கண்ணன், ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ், அ.சுப்ரமணியம், சி.பழனியாண்டி, டி.என்.முருகேசன், நகர மன்ற தலைவர்கள் து.கலாநிதி, முனைவர் கவிதா சங்கர், நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் - நகர செயலாளர்கள் தா.கார்த்திகேயன், அ.குமார், எம்.செல்வம், ஞானசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் ஜி.தங்கவேல், கு.பழனிவேல், பி.பி.தனராசு, கே.கே.சண்முகம், ஏ.பி.ஆர்.சண்முகம், செல்வம், நாச்சிமுத்து, இளங்கோவன், எம்.தங்கவேல் செல்வராஜ், நகர மன்ற தலைவர்கள் நளினி சுரேஷ்பாபு, எம்.செல்வராஜ், 
நாமக்கல் கிழக்கு மாவட்டஇளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத்  மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் தீபக் , நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பூபதி மற்றும் மாவட்ட இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி, மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி, மருத்துவ அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள், வார்டு, கிளை இளைஞர் அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கைக்கிணங்க நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினா். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, கழக தீர்மான குழு துணை தலைவர் பார். இளங்கோவன், திராவிட மாடல் பாசறை பேச்சாளர் டான் அசோக், மாநில நிர்வாகிகள் சி.ஆனந்தகுமார்,  ப.ராணி, அ.ரியா, முத்துவேல் இராமசுவாமி, எஸ்.ராஜேஸ்பாபு மற்றும் மாவட்ட இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்