Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சியில்  900 மரக்கன்றுகள் நடும் விழா

ஆகஸ்டு 25, 2023 12:25

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம் அரியூர் நாடு ஊராட்சி பகுதிகளில் கிழக்கு வளவு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சி.நாகலிங்கம் தலைமை வகித்தார்.

அரியூர் நாடு கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் ராஜ்குமார் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மூலம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வனத்துறையின் மூலம் வளர்க்கப்பட்டு பல்வேறு வகையான மரக்கன்றுகளான வாகை, சீமை அகத்தி, புங்கன், வேம்பு, கொடுங்கா புளி என சுமார் 900 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர் ரூபிணி , ஊராட்சி செயலாளர் செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்