Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2.50 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

செப்டம்பர் 09, 2023 12:02

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் டெண்டரில் 75மூட்டைகள் வரத்து வந்தது.  இதில், முதல் தரம் ரூ.70.80முதல் ரூ.79.30வரையிலும், இரண்டாம் தரம் ரூ53.20 முதல் ரூ.66.40 என மொத்தம் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த டெண்டர் 15/09/2023 வெள்ளிக்கிழமை நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்