Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை போராட்டம்

செப்டம்பர் 28, 2023 12:04

ராசிபுரம்: கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் உத்தரவை மதிக்காமல்  தண்ணீர்  திறந்து விட மறுப்பதைக் கண்டித்தும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளிட்டார்.

அவ்வறிக்கையில் தமிழ்நாட்டில் இருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையம் மூலம் கர்நாடகாவிற்கு மின்சார உற்பத்தியை நிறுத்தி கர்நாடகாவிற்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்படுத்தும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் வருகின்ற 09.10.2023 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தை மின்சாரம் உற்பத்தி நிலைய  முற்றுகைப் போராட்டம் நடைபெறும். 

தொடர்ந்த தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

அது சமயத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக ஆர்வலர்கள் , அரசியல் கட்சியினர்  விவசாயத்தை காப்பதற்கும் காவிரி உரிமையை கர்நாடகா மாநிலத்தில் அராஜகத்தை தடுக்க வேண்டும்.

 அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வந்து நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுத்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் அனைவரும்   முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.  வேலுசாமி. அழைப்பு விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்