Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ஓம் சிவ சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் பட்டணம் கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முன்னதாக மகளிர் அணியினரின் கோலாட்டமும், கும்மியாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.