Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.3லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

அக்டோபர் 21, 2023 11:55

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் 75 மூட்டைகள் வரத்து வந்தது.

இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ. 75.35  முதல் ரூ. 82.85 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 62.25 முதல் ரூ. 71.25 வரையிலும் என மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் அக்.27 ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்