Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பதிவு செய்யாமல் விதைகள் விற்பனை செய்தால் நடவடிக்கை

அக்டோபர் 31, 2023 06:49

நாமக்கல்: Unregistered Seeds Sales Strict Action பதிவு செய்யாமல் விதைகள் விற்பனை செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், ராகி, காய்கறி பயிர்கள், பயறுவகை, எண்ணெய் வித்து மற்றும் கால்நடை தீவனப் பயிர்கள் போன்றவை அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வேளாண்மைத்துறை மட்டுமின்றி தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்து விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை உறுதிசெய்யும் வகையில், சென்னை விதைச் சான்றளிப்பு மற்றம் அங்கக சான்றளிப்புத் துறை அனைத்து தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு அனைத்து விதை உற்பத்தியாளர்களுக்கும் பதிவு சான்று வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பதிவு சான்றினை ஒவ்வொரு தனியார் ரகத்திற்கும் உற்பத்திளாளர்களிடம் பெற்று விதை விற்பனை செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

விதை ஆய்வாளர்களிடம் ஆய்வின்போது இச்சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானதாகும்

இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றாத விதை விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் விதிமுறைகளின்படி அபராதமும் விதிக்கப்படும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்