Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பா.மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வருகின்ற 3-11-2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மல்லசமுத்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்மு முகாமில் மனநல மருத்துவர் குழந்தை நல மருத்துவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதித்து புதிய அடையாள அட்டை வழங்கவும் பழைய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட உள்ளது.
மேலும் உதவி உபகரணங்கள் பெறவும் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்ய இருப்பதால் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறன் உடைய குழந்தைகள் முகாமிற்கு வரும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் 2 ஆதார் அட்டை நகல் 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் நான்கு வங்கி கணக்கு புத்தக நகல் 2 தவறாமல் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது