Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டிற்கு  கண்டனம்

நவம்பர் 03, 2023 04:37

நாமக்கல்: காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தவறான முறையில் செயல்படும் செயல்பாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிப்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் இரா.வேலுசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகா அணைகளில் தற்போது பருவமழை பொழிவின் காரணமாக போதிய தண்ணீர் இருந்தும் 30.10.2023 அன்று  காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 01.11.2023 முதல் 23.11.2023 வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரிக்கு இரு மாநிலத்திற்கும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 2600 கனஅடி தண்ணீர் வீதம் கர்நாடகா அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க ஒழுங் காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று  கர்நாடகத்திற்கு சாதகமாகவும்,  ஒருதலை பட்சமாகவும் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து அறிவிப்பு வெளியிட்டதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறது.

தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொழிந்து தண்ணீர் வரத்தின் காரணமாக அங்குள்ள அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. 

30.10.2023 அன்று  நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் விளைவிக்காமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று 29.10.2023 அன்று அறிக்கை வெளியிட்டேன்.
 தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் தாளடி சம்பா சாகுபடிக்கு கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு பாசனத்திற்கு உண்டான தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய விவசாயிகள் சங்கம் மூலம் வலியுறுத்தினோம்.

இதனை தொடர்ந்து 30.10.2023 அன்று  நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு மாநிலத் திற்கும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 2600 கன அடி வீதம் கர்நாடகா அணை களிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

 தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டும் கர்நாடகாவிற்கு சாதகமாகவும் ஒருதலைபட்சமாகவும் நடந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் விளைவிப்பது கண்டனத்திற்குரிய செயல்பாடாக உள்ளது.

இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனம் சாதிப்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

தலைப்புச்செய்திகள்