Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குற்றப் பின்னணி உள்ளவர்கள் வீடுகளில் ஆய்வு

நவம்பர் 06, 2023 11:12

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் காவல் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் டி.எஸ்.பி இமயவரம்பன் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன், ஊரகக் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி மோகன், காவல் நிலைய ஆய்வாளர் தீபா, காவல்துணை ஆய்வாளர் நந்தகுமார் மற்றும்  காவலர்கள், மகளிர் காவலர்கள் என 50க்கும் உட்பட்டோர் மேற்கொண்டனர்.

இப்படையுடன் திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில்  ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  அருகில் இருந்தவர்களிடம்  கேட்டபோது அவர்கள் திரும்பி வேலைக்குச் செல்வதாகவும், தற்போது எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும்   தெரிவித்தனர்.

வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதையும், ஒழுங்காகத் திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் கூறப்பட்டது. இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் எனவும் இவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் செல்வதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் கொண்டு இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அருகில் இருந்த குற்றப்பின்னணி உள்ளவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களை அந்தந்த காவல் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப் பட்டது.

தலைப்புச்செய்திகள்