Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிப்காட் அமைத்தால், அரசு எதிர் விளைவுகள் சந்திக்கும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் அரசுக்கு எச்சரிக்கை

நவம்பர் 06, 2023 11:23

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைத்தால் அதற்கு அரசாங்கம் மீண்டும் முயற்சி செய்தால் அதை தடுத்து நிறுத்துவதோடு அதற்கான எதிர் விளைவுகளை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் சந்திக்க வேண்டி இருக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா வளையபட்டி ,அரூர், என்.புதுப்பட்டி, பரளி பகுதிகளில் சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி போராடும் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று வளையபட்டி லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 கருத்து கேட்பு கூட்டத்திற்கு தலைமை வகித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான 
E.R.ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

இதில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிப்காட் வருவதை தவிர்க்க வேண்டும், சிப்காட்டினால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து தனித்தனியாக ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

அனைவரின்  கருத்துக்களையும் கேட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில்  தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார்.
 
அவர் பேசுகையில், இந்த சிப்காட் இந்த பகுதியில் அமைந்தால் வேலைவாய்ப்பு இந்த பகுதி மக்களுக்கு குறைந்த அளவிலே கிடைக்கும் என்றும், மொத்தத்தில் 10 ஆயிரம் பேருக்கு தொழிற்சாலை வந்தால் வேலை வாய்ப்பு ஏற்படும் என்றால் அதில் குறைந்தது  200 நபர்களுக்கு தான் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ஆனால் மற்ற வேலை ஆட்கள் அனைவரையும் வட இந்தியர்களாக கொண்டு வந்து நிரப்ப வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அரசு  இங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்கிய விவசாய நிலங்கள்  இந்த இடத்தை விட்டு போவதோடு, அவர்கள்  செய்து வந்த விவசாயத் தொழிலும் போய் விடும் அவர்களுக்கு வேறு வாழ் வாதாரம் இல்லாமல் போய்விடும் அதுமட்டுமல்லாமல், வட இந்தியர்களால் பிற்பகுதியில் உள்ள சுற்றுப்புற பகுதிகள் வசிக்கும் பொது மக்களுக்கு வாழ்வாதாரமும் இழப்பு ஏற்படும். மேலும் இவர்கள் வட இந்தியர்கள் உடன் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட வேண்டியது வரும்.

குறிப்பாக இப்பகுதிவாழ் மக்களின் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இண்மை ஏற்படும் என்று தான் இப்பகுதி அனைத்து விவசாயிகளும் கருத்துக்களை தெரிவித்தனர்.

 எனவே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இப்பகுதி மக்களின் கருத்துக்களை தான் பிரதிபலிக்குமே ஒழிய அரசாங்கத்தின் கருத்தை பரிதிபலிக்க முக்கியத்துவம் கொடுக்காது என்றும் இப்போது கூடியிருந்த விவசாய பெருமக்கள் சிப்காட் வேண்டுமென்று சொல்லி இருந்தால் அதற்கான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினராகவும்,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் செய்வேன் ஆனால் அனைத்து மக்களும் சிப்காட் வேண்டாம் என்று சொல்லி இருப்பதால் இந்த முக்கிய கருத்து இந்த  மக்கள் கருத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் கொண்டு சென்று இந்த பகுதியில் அதாவது வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறுவேன் என்று இந்த கருத்து கேட்டு கூட்டத்தின் தலைவருமான ஈஸ்வரன் பேசினார்.

முன்னதாக  ஆரம்பித்தில் பேசிய ஈஸ்வரன் எம் எல் ஏ அரசாங்கம் நடத்தும் கருத்து கேட்பதற்கு கூட்டம் போல அல்ல.   இது கருத்து கேட்பு கூட்டம் என்றும்,
இது உண்மையாக இருக்க வேண்டும் மக்களிடம் நேரடியாக வந்து அவர்களின் ஆதங்கத்தை கேட்டு அதை பிரதிபலிக்கும் கருத்து கேட்டு கூட்டமாக இது அமைந்தது என்பது மிகவும் வரவேற்க தகுந்தது என்றும் குறிப்பிட்டார்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.மாதேஸ்வரன், விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிர மணியன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் விவசாய அணி செயலாளர் கே.ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்