Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிலக்கடலையில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிகள்

நவம்பர் 07, 2023 11:12

பரமத்திவேலூர்: நிலக்கடலையில் பூச்சிகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு சைபர்மெத்ரின் 3 சதம் மற்றும் குயினால்பாஸ் 20 சதம் EC கலந்த 500 மில்லி இரசாயன மருந்து கலவையை 120 லிட்டர் தண்ணீருடன் செடியில் மருந்து ஒட்டுவதற்கு 25 மில்லி சிலிகான் ஓட்டும் திரவம் கலந்து உடனே தெளிக்குமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்