Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொம்மசமுத்திரம் ஏரியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

நவம்பர் 09, 2023 06:29

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், அடுத்த பெரியகுளம் காந்திபுரம் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் பொம்மசமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, நக்காறு,பெரியாறு, கருவாட்டாறு, சின்னக்குளம், குண்டுமதகு, வெண்டாங்கி, பெரியகுளம் உள்ளிட்ட ஏரிகளின் வழியாக மழை நீர் பொம்மசமுத்திரம் ஏரிக்கு வந்து நிரம்புவது வழக்கம்.

பொம்மசமுத்திரம் ஏரி நிரம்புவதால் காந்திபுரம், பெரியகுளம், ஆர்.பி.புதுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிளில் உள்ள விவசாய கிணற்றின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தின் தென்னை, மரவள்ளி கிழங்கு, பருத்தி, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பொம்மசமுத்திரம் ஏரியில் உள்ள கருவேல் மரங்களை அகற்றும் பணி நேற்று துவங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்