Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 24 ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

நவம்பர் 21, 2023 12:15

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2023 - ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருகின்ற 24.11.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப் பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கை களையும் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்