Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் ஆட்சியர் ச.உமா ஆய்வு

நவம்பர் 23, 2023 10:24

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், தொப்பப்பட்டியில் வேளாண்மைத்துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய நீடித்த வேளாண் இயக்கம் ( மானாவாரி பகுதி மேம்பாடு )  மூலம் நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் கீழ்  ரூ.150.00 லட்சம் மதிப்பில் 500 எண்கள் அலகு இலக்காக பெறப்பட்டுள்ளது.

இதில் நாமகிரிப்பேட்டை வட்டாரத்திற்கு ரூ.12.00 இலட்சத்திற்கு 40 எண்கள் அலகு என நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் வயலில் மாடு வளர்ப்பு, மண்புழு படுகை, தேனி வளர்ப்பு, சோளம் பயிர்சாகுபடி மற்றும் பழகன்றுகள் நடவு உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் 
ச.உமா ஆய்வு, மேற்கொண்டார்.

தொடர்ந்து, அட்மா திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் விநியோகம் செய்யப்பட்ட பருத்தியல் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறிகள் - செயல் விளக்கத் திடலை ஆய்வு மேற்கொண்டார்.  

மேலும், 2021-22ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்பானது வெகு சிறப்பாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் ஊனந்தாங்கல் தொகுப்பில் 15.05 ஏக்கரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பாக 700 அடியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, 13 புதிய மின் கம்பங்கள் கொண்டு செல்லப்பட்டு ரூ.2,42,170 மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்பட்டு, 776 எண்கள் செந்துரா வகை மாங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 

தொகுப்பின் ஓரங்களில் 200 மகாகனி, 320 தேக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொகுப்பில் ஊடுபயிராக நிலக்கடலை, சாமை மற்றும் மரவள்ளி சுமார் 11 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  

இந்த ஆய்வில், வேளாண் இணை இயக்குநர் எஸ்.துரைசாமி, உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்