Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நவம்பர் 25, 2023 11:00

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (21.11.2023) 700.76 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 104.15  மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளதால் மொத்தம் 103670 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்  மாவட்டத்தில் 2016-17 முதல் 2022-2023 வரை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 4,43,502 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

இதில் 4,08,112 விவசாயிகளுக்கு ரூ.278.20 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையாக இதுநாள் வரை வழங்கப்பட்டுள்ளது.  

மீதமுள்ள 35,390 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறப்பு பருவத்தில் நெல் (சம்பா) மற்றும் சின்ன வெங்காயம் பயிர்களுக்கும் இரபி பருவத்தில் சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி கரும்பு, மரவள்ளி, வாழை மற்றும் தக்காளி பயிர்களுக்கும் FEATURE GENERALI நிறுவனம் மூலம் காப்பீடு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல் (சம்பா) பயிருக்கு ரூ.347.53-ஐ 15.12.2023 ஆம் தேதி வரையிலும், சோளம் பயிருக்கு எக்கருக்கு ரூ.128.03-ஐ 30.11.2023 ஆம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.312.70-ஐ ரூ.31.12.2023 ஆம் தேதி வரையிலும் மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.474.24 –ஐ 30.11.2023ம் தேதி வரையிலும் பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.584.44 –ஐ 15.03.2024ம் தேதி வரையிலும் மற்றும் கரும்பு பயிருக்கு ரூ.2,914.60–ஐ ரூ.30.03.2024 ஆம் தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா.மல்லிகா, வருவாய் கோட்டாட்சியர்கள் மா.க.சரவணன், சே.சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

 மேலும், இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் சு.துரைசாமி, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கு.சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ப.முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கணேசன், வேளாண்மை துணை இயக்குநர் நாசர்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கா.முருகன், பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் த.முத்துபாண்டியன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்