Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

நவம்பர் 25, 2023 11:39

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரத்தில், சோளம் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து, மல்ல சமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில், ரபி சிறப்பு பருவ பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ரபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளம் பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம்தேதி கடைசி நாளாகும். இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயி களும் (குத்தகைதாரர் உட்பட) விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பு ஆண்டு ரபி பருவ பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், கிராம வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.

சோளம் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.128.03செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

இதில், வருவாய் கிராமத்தின் பெயர், விவசாயியின் பெயர் அல்லது குத்தகைதாரரின் பெயர், வங்கி எண், ஐ.எப்.சி.,கோடு, தொடர்பு எண் இவை அனைத்தும் சமர்ப்பிப்பதற்கு முன்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மல்லசமுத்திரம் வட்டார வேளாண்விரிவாக்க மையத்தை அணுகவும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தலைப்புச்செய்திகள்