Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் - மதுரா செந்தில் அறிவிப்பு

நவம்பர் 27, 2023 12:32

நாமக்கல்: பெரியார் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் கண்ட கனவினை நினைவாக்கும் வண்ணம் நாளும் உழைத்து வருகின்ற இளைஞர்களின் இதயம் கவர்ந்த தலைவரும், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் பெருமைமிக்க இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்று இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அயராது உழைத்து அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து  வழிநடத்தும் இளம் தலைவர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் கழகத்தினரும் இளைஞர் அணி மற்றும் சார்பு நிர்வாகிகள் அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ளது.

ஆதரவற்ற இல்லங்களில் உணவு உடை வழங்கும் நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் ஓட்டம், கிரிக்கெட், இறகு பந்து, கால்பந்து, கைப்பந்து, சிறகுபந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

மேலும் ஏழை, எளியவருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிகளை மிகவும் கோலாகாலமான முறையில்  நடத்திட வேண்டும்.

மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் ஆங்காங்கே கழகக்கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினார்.

மேலும் ஏழை, எளிய மக்கள், மாணவ,  மாணவிகள் பயன்பெறும் வகையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு நாமக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நவம்பர் 27 அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனும் நாமக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்

தலைப்புச்செய்திகள்