Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாமலைக்கு  விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கண்டனம்

டிசம்பர் 02, 2023 12:46

ராசிபுரம்: மத்திய அரசு கர்நாடக அரசிடமிருந்து காவிரிபங்கீட்டு தண்ணீரை இந்தாண்டு பெற்று தராமல் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்து கொண்டு என் மக்கள் என்மண் என்ற நடைபயணத்தில் தவறான கருத்தை கூறிய பா.ஜக தலைவர்கே.அண்ணாமலை கூறிய கருத்தை ஏற்க இயலாது.

மத்திய அரசு தான் இதற்கு முக்கியகாரணம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்மாநில தலைவர் இரா. வேலுசாமி  கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்மாநில தலைவர் இரா. வேலுசாமி அறிக்கையில் கூறி இருப்பது வருமாறு:-

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது 26.11.2023 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை  இந்தாண்டு காவிரி டெல்டா பாசன பகுதியில் 3 லட்சம் டன் நெல் உற்பத்தி மற்றும் கொள்முதல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டதற்கு தமிழக அரசு தான் முக்கிய காரணம் என்று பா.ஜ.க தமிழக தலைவர்  செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டதற்கு தமிழக அரசு மட்டும் காரணமில்லை மத்திய அரசு தான் இதற்கு முழு முக்கிய காரணம் - மத்திய அரசு காவிரி பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் கர்நாடகா அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் விளைவித்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு - காவிரி பங்கீட்டு தண்ணீரை உரிய காலத்தில் பெற்று தராமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவருக்கு பதிலறிக்கை வெளியிடுகிறது என்று குறிப்பிட்டு இரா.வேலுசாமி மேலும் 

தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீர் இந்தாண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடகா அரசு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்  பாட்டில் உள்ள காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டும் தற்போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அணையில் போதிய தண்ணீர் இருப்பு இருந்தும் காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் இரண்டும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உண்டான பாசனத்திற்கு தண்ணீரை பெற்று தராமல் கர்நாடகாவிற்கு சாதகமாக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது.

காவிரி விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இரு மாநிலங்களில் நிலவும் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் சமரசமும் செய்யாமல் காவிரி தண்ணீரை டெல்டா பாசனத்திற்காக கர்நாடகாவில் இருந்து பெற்று தராமல் தமிழ்நாட்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அநீதியை இந்தாண்டு விளைவித்துவிட்டது. மத்திய பா.ஜ.க அரசின் 

இக்காரணத்தால் தான் இந்தாண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தற்போது 3 லட்சம் டன் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதி பாலைவனமாக மாறியுள்ளதை உணராமல் தமிழக பா.ஜ.க.தலைவர்  கே. அண்ணாமலை  தவறான தகவல் தெரிவித்ததற்கு தகுந்த விளக்கத்துடன் அவருக்கு நான் நினைவுபடுத்துகிறேன்.

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டு தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்துகிறது. மத்திய பா.ஜ.க அரசு கர்நாடகாவில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள கன்னட மக்களிடம் அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு காவிரி விவகாரத்தில் மௌனம் சாதித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் அமல்படுத்தாமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை  3 லட்சம் டன் நெல் உற்பத்தி கொள்முதல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டதற்கு தமிழக அரசு தான் முக்கிய காரணம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தவறான முறையில் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மத்திய அரசு தான் மிக முக்கிய காரணம். மத்திய அரசு காவிரி விவகாரத்தில் இரு மாநில பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் கர்நாடகா அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டு தமிழக விவசாயிகளுக்கு அநீதியை விளைவித்ததை உணராமல் தமிழக பா.ஜக. தலைவர் அரசியல் ஆதாயத்திற்காக கபட நாடகம் நடத்துவதை காவிரி டெல்டா விவசாயிகள் நன்றாக அறிந்து கொண்டு தான் உள்ளார்கள் என்பதை தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலைக்கு  நினைவுப்படுத்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ள இரா. வேலுசாமி

மத்திய அரசு கர்நாடக அரசிடமிருந்து காவிரி பங்கீட்டு தண்ணீரை இந்தாண்டு பெற்று தராமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து கொண்டு என் மக்கள் என் மண் என்ற நடைபயணத்தில் தவறான கருத்தை கூறிய பா.ஜக தலைவர் கே. அண்ணாமலை கூறிய கருத்தை ஏற்க இயலாது. மத்திய அரசு தான் இதற்கு முக்கிய காரணம் மத்திய பா.ஜ.க. அரசு தான்.

தமிழ்நாட்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இந்தாண்டு காவிரி தண்ணீர் பெற்று தராமல் மௌனமாக இருந்து கொண்டு துரோகம் செய்ததை முன்னிட்டு மத்திய பா.ஜ.க அரசு மீது தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு டெல்டா பகுதியில் இந்தாண்டு நெல் உற்பத்தி 3 லட்சம் டன் பாதிப்பு ஏற்படுத்தியதற்கு உண்டான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என இந்த அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்மாநில தலைவர் இரா. வேலுசாமி அந்த அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்