Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக மண் தினம் குறித்த கருத்து காட்சி கூட்டம் ஆட்சியா் உமா தலைமை பங்கேற்பு

டிசம்பர் 06, 2023 11:49

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி,  வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் உலக மண் தினம் குறித்த கருத்து காட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்தாதவது, மண் வளத்தை மேம்படுத்தவும், மண் வளத்தை காத்திடவும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5 ம் தேதியினை உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டு சர்வதேச அளவில் மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் மண்வளம் காத்திடவும், மண்ணின் சத்துக்களை அறிந்து சமச்சீராக உரமிடவும், இராசயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் காற்று மண் மாசுபடுதலை தடுக்கவும், இயற்கை மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தினை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  

விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை எளிதாக அறியும் வகையில் “தமிழ் மண்வளம்” என்ற இணையதளம் தொடங்கப்பட்டு அதில் அனைத்து விவசாயிகளின் சர்வே எண் வாரியான மண்ணில் உள்ள சத்துக்களின் விபரம், அடுத்து பயிரிடப்படவுள்ள பயிருக்கான உரப்பரிந்துரை போன்ற விபரங்கள் பதியப்பட்டுள்ளது.  

அதனை விவசாயி தன் கைபேசி மூலமாகவே உழவன் செயலி மூலம் மண்வள அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.
 நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணம்பாளையத்தில் நடமாடும் பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது.

நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த கிராமங்களிலிலேயே மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  

மேலும் விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலமாகவும், நேரடியாகவும் மண் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பலாம்.

மண்வளம் காத்திட, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம் அமைக்க மகிழம் விவசாய குழுவிற்கு வேளாண் இடுப்பு பொருட்கள், 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.துரைசாமி, உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்