Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி அறிக்கை

டிசம்பர் 10, 2023 01:16

ராசிபுரம்: தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் இந்தாண்டு தர மறுத்த கர்நாடகா அரசுக்கு தமிழகத்தில் இருந்து மத்திய தொகுப்பில் உற்பத்தி ஆகும் மின்சாரம் வழங்காமல் கர்நாடகாவிற்கு வெகு விரைவில் தொழில் நிறுவனம் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருளில் மூழ்கடிக்கும் நிலைமையை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்‌ மூலம் பாதிப்பை ஏற்படுத்தி காட்டுவோம் என்று கர்நாடகா அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு தர மறுத்த கர்நாடகா அரசு அங்கு உள்ள அணையில் போதிய தண்ணீர்  இருப்பு இருந்தும் பிடிவாதமாக இருந்து கர்நாடகா அரசு காவிரி டெல்டா பாசன பகுதியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் சம்பா தாளடி சாகுபடி ‌செய்ய காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருபது லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி இல்லாமல் நெல் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துவிட்டது.

இதனால் விவசாய தொழில் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கர்நாடகா அரசு தமிழக விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் பிடிவாதமாக செயல்பட்டது தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை பழிவாங்கிய கர்நாடகா அரசை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கர்நாடகா அரசு வேணுமென்றே தமிழக டெல்டா பாசன விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தமிழக விவசாயிகள் இமியளவும் இதுநாள் வரை மறக்கவில்லை கர்நாடகா அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நம்பிதான் அங்கு உள்ள தொழிற்சாலை மற்ற தொழில் நிறுவனங்களை இயக்கி வருகிறது என்பதை கர்நாடகா அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மூலம் நினைவுபடுத்துகிறேன்.

இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கர்நாடகா அரசிடம் இருந்து பெற்று தர கோரி தமிழ்நாடு அரசிடம் இருந்தும் மற்றும் மத்திய பாஜக அரசிடம் இருந்தும் இருந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இனி ஒருபோதும் வழியுறுத்தமாட்டோம்  தமிழக அரசும் மத்திய பாஜக அரசும் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது.

ஆகவே தமிழகத்தில் இருந்து மத்திய தொகுப்பில் உற்பத்தி ஆகும் மின்சாரம் தமிழக விவசாயிகளின் விளை நிலத்தின் வழியாக மின் கோபுரம் டவர் மூலம் தான் கர்நாடகாவிற்கு மின்சாரம் செல்கிறது கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு உண்டான காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் இந்த ஆண்டு தர மறுத்த காரணத்தை முன்னிட்டு விரைவில் கர்நாடகா அரசுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்தில் இருந்து உற்பத்தி ஆகும் மின்சாரம்‌ கர்நாடகாவிற்கு செல்லுவதை முற்றிலும் நிறுத்தி கர்நாடகாவில் செயல்படும் தொழில் நிறுவனம் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கர்நாடகா பகுதி முழுவதும் வெகு விரைவில் இருளில் மூழ்கடித்து காட்டுவோம் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு  இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்