Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

டிசம்பர் 10, 2023 01:25

குமாரபாளையம்: குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கார்த்திகை வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம்  அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.

இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி  சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப் பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்