Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்

ஜனவரி 16, 2024 11:53

மதுரை: தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன.

புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று  காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர்.

அதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள்  அவிழ்த்து விடப்பட்டன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில் 7 வது சுற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது  556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டது.

தயார் நிலையில் இருந்த கால்நடை மருத்துவக்குழு காளைக்கு உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.பின்னர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தொடந்து நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்றும் 400 வீரர்கள் களம் கண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று முடிவில் 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாகப் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து ரஞ்சித் 13 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும், 9 காளைகளை அடக்கி முரளி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலைமை காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 48 பேர் காயமடைந்துள்ளனர்.

மாடுபிடி வீரர்கள் 19 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் 2 பேர், காவலர்கள் 2 பேர் என மொத்தம் 48 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்