Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் 2 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை

ஜனவரி 16, 2024 12:15

கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘ திருவள்ளுவர் தினம், 25-ம் தேதி வள்ளலார் தினம் கொண்டாடப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகிய கடைகளை திறக்க தடைவிதிக்கப்படுகிறது.

மேற்கண்ட இருநாட்களும் கோவை மாநகராட்சியால் உக்கடம், சத்தி சாலை, போத்தனூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அறுவை மனைகள், துடியலூரில் உள்ள மாநகராட்சி இறைச்சிக் கடைகள் ஆகியவை செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது

தலைப்புச்செய்திகள்