Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்: நீதிபதி கிருபாகரன்

மே 20, 2019 08:32

கும்பகோணம்: கும்பகோணத்தில் புத்தக வெளியிட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டு பேசும்போது,
திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும், இது வீடுகளில் ஒலிக்க வேண்டிய குறளாகும் என கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, திருக்குறள் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவை பற்றி தெளிவாக கூறியுள்ளது, இந்த காலத்தில் வாழ வேண்டியதை, அந்த காலத்திலேயே திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

நீதிபதிக்களுக்கென்றும் குறள் உள்ளது. இரண்டு வழக்கறிஞர் வாதிடும் போது, குறளுக்கேற்ப, சமூதாயத்திற்கு ஏற்ற வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும். மொழிகளிலேயே திருக்குறள் நுாலை தான் அதிக அளவில் மொழி பெயர்த்துள்ளனர். கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழை கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தற்போது உலகத்தில் ஆங்கில மொழி தெரிந்திருந்தால் பிழைக்க முடியும். ஆங்கில மொழியை கற்றுக்கொண்டால், உலகம் முழுவதும் செல்ல முடியும். ஆனால் நாம் ஒரு கண்ணை தாய் மொழியாகவும், மற்றொரு கண்ணை தமிழ் மொழியாக பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழியாகும். 

இந்தியாவில் பழமையான மொழி என்பதற்காக ஆதாரங்கள் உள்ளன. அது நம் முன்னோர் விட்டு சென்ற எச்சங்கள் மிச்சங்கள் தான்.
இந்திய தொல்லியல் துறையினர் இந்தியாவில் சுமார் 1 லட்சம்  கல்வெட்டுக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் 60 சதவீதம் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதிலும் 5 சதவீத்தை தவிர மற்றவைகள் தமிழில் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் தமிழை போற்றி வருகின்றனர். அவர்கள் மற்ற மொழி மீது வெறுப்பை உண்டாக்கி விட்டார்கள்.  தமிழ் மொழியை மட்டும் படித்தால் போதுமா. ஆனால் பிற மொழியை வெறுக்காமல், அனைத்து மொழிகளை கற்று கொள்ள வேண்டும்.

தற்போது மனிதனிடம் பேசுவதை விட மிஷினில் பேசுவது தான் அதிகமாகியுள்ளது. இதனால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. திருக்குறளை உலக அளவில் போற்றப்படவில்லை. அதனை உலக அளவில் கொண்டுசெல்ல வேண்டும். இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் மொழியை  ஏற்று கொள்கின்ற மனப்பக்குவத்தில் இல்லை. தமிழன் தாய் மொழியை தமிழை ஏற்றுகொள்ள வற்புறுத்த வேண்டியுள்ளது.

திருக்குறளை உலக அளவில் யுனஸ்கோவால் அங்கீகரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் உலகம் முழுவதும் திருக்குறள் பரவும். தமிழகத்திலிருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் தற்போது தமிழ் மொழியை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என்றார்.

தலைப்புச்செய்திகள்