Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன விலங்குகள் கோடை வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் வனப்பகுதிகளில் தண்ணீர் குட்டைகள்

மே 29, 2019 08:30

நீலகிரி: 
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர். 

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் வாசிக்கும் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகளை காண அதிகளவில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்வது வழக்கம். 

மேலும் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் வனப்பகுதிகளில் வனத்துறையின் மூலம் தண்ணீர் குட்டைகள் அமைத்து மழை நீர் சேமிக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில் கடந்த  சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வனப்பகுதி பசுமை திரும்பியுள்ளன. இதனால் வனப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

முதுமலையில் தற்போது யானைக் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது, பகல் நேரங்களில் ஏற்படும் வெப்ப நிலையின் காரணமாக காட்டு யானைகள் தண்ணீர் குட்டைகளில் விளையாடி மகிழ்ந்து வருகின்றன.   யானைகள் தண்ணீர் குட்டைகள் விளையாடும் இந்த ரம்மியமான காட்சியினை கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசம் அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்