Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தடை

ஜுன் 27, 2019 08:32

கும்பகோணம்: கும்பகோணத்தில் வருகிற  ஜூன் 30ந் தேதி  பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்குத் தடை அறிவித்திருக்கிறது தமிழக அரசு .இது குறித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, ஒருங்கிணைப்பாளர்  விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர்  குடந்தை அரசன் கூறியதாவது.:

தமிழகக் கனிம வளங்களைச் சூறையாடும் நோக்கத்தோடு  நுழைய இருக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களை விரட்டியடிக்க வேண்டும் எனும் காவிரி கடைமடைப் பகுதி வாழ் மக்களின் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டிற்குத தமிழக அரசு தடை அனிவித்திருக்கிறது.

தூத்துக்குடியில் 14 தமிழர்களை சுட்டுக்கொன்ற பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுக் கொள்ளையர்களான வேதாந்தா நிறுவனத்திற்கு வழி விடுவதுதான் அதிமுக அரசின் நோக்கம் என்றால் அதையும் கடுமையாக எதிர்க்கவும் கண்டிக்கவும் செய்கிறோம்.

ஏற்கனவே, தமிழகத்தின் கனிம வளங்களை  ஒரு சல்லிக்காசு கூடப் பங்கீடு கொடுக்காமல் சூறையாடிக் கொள்ளையடித்துச் செல்லும் இந்திய பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்களை வெளியேற்றிடும் கடமை கொண்ட தமிழக மக்களுக்கு ஆதரவாய் நிற்காமல், அந்தக் கொள்ளை நிறுவனங்களுக்கு அடிமை பட்டயம் எழுதிக் கொடுத்தது போல், கூட்டுச் சேர்ந்து வாய்க்கரிசி வாங்கிக்கொள்ள அலைவது போல் அடிமைப்பட்டுக் கிடக்கிறது  தமிழக அதிமுக அரசு.

மக்களின் துணையோடு, சட்டப்படி அரசின் தடை உடைத்து, மாநாட்டைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திடும் என அறிவிக்கிறோம். மக்கள் போராட்டங்கள் எல்லாம் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வருவது வருந்ததக்கது.

தலைப்புச்செய்திகள்