Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காலியாகும் அமமுக கூடாரம்: முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்

ஜுலை 15, 2019 07:32

சென்னை: வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவுக்குப்பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இருந்தார். அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அமமுகவில் இருந்து விலகிய அவர் தனது  ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்