Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஸ்ரீ நாக சதுர்த்தி பாலாபிஷேக விழா

ஆகஸ்டு 05, 2019 04:08

கும்பகோணம்: கும்பகோணத்தில் நாக தோஷ பரிகார முதன்மை தலமாக விளங்குவது  ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி கோவில். இக்கோவிலில் வீற்றிருக்கும் நாக கன்னி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீ நாக சதுர்த்தி பாலாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

நாக சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு நாக கன்னி அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும், குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் ஏற்றம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்நிலையில் ஆதி சேஷன் வழிபட்ட பாம்பு புற்றின் மேல் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராகு பகவானுக்கும், ஸ்ரீ நாக கன்னி, ஸ்ரீ கேது பகவானுக்கும் இன்று ஸ்ரீ சர்ப சாந்தி ஹோமம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மும்மூர்த்திகளுக்கும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பெண்கள் ஆண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராகு பகவான், ஸ்ரீ நாக கன்னி, ஸ்ரீ கேது பகவானை வழிபட்டனர்.

தலைப்புச்செய்திகள்