Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

ஆகஸ்டு 05, 2019 10:37

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின்னர், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 4 மசோதாக்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில்,  சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவின் நகலும் ஊடகங்களில் அறிவிக்கையாக வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்