Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 06, 2019 04:37

கும்பகோணம்: கும்பகோணத்தில் மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களான தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் நீட் நெக்ஸ்ட் என்ற மருத்துவத்தை சீரழிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சட்டம், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் பதிவு கட்டணம் 40 மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து சிறுபான்மை மக்களை நசுக்கும் மாநில அரசு நீதி சட்டம்  தேசிய புலனாய்வு முகமை சட்டம் ஏழை மாணவர்களை வாழ்வில் சீரழிக்கின்றது. 

இந்த புதிய கல்வி கொள்கை திட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி  காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் ஒன்றியம் உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு கொண்டு வரும் சட்டங்களை மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர் அப்போது போலீசார் ஏராளமனோர் குவிக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறை ஒலிபெருக்கி அனுமதி தராமல் இருந்த பொழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்