Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்

ஆகஸ்டு 09, 2019 05:22

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் கவுன்சிலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்துரை வழங்கினார்கள். சாலையில் விபத்து ஏற்பட்டால் விபத்து ஏற்பட்டது உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதை விட்டுவிட்டு செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் விபத்து நடந்ததை பரிமாறி கொள்ளாமல் வருங்கால மாணவ மாணவிகளுக்கு விபத்து நடந்ததற்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கட்டு தொழில் கற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் குமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வெள்ளம் புயல் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்த ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் சிறப்பாக செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்