Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பக்ரீத் பண்டிகையின்போது பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் கமலக்கண்ணன்

ஆகஸ்டு 09, 2019 05:43

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிஎச்.டி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்தது. 

இந்நிலையில் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிஎச்.டி ஆய்வை மேற்கொள்ளும் (மாணவர்களுக்கு) ஆய்வாளர்களுக்கு முதல்முறையாக ஊக்கத்தை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு 17 மாணவர்களுக்கு தலா ரூபாய்-5 ஆயிரக்கணக்கான காசோலையினை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில்  பிஎச்.டி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூபாய் 5ஆயிரம் என ஆண்டுக்கு ரூபாய் 50ஆயிரம் உதவித்தொகை வழங்குவதன் மூலம் பிஎச்.டி படிப்பில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறினார். 

மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போது சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில் இந்த ஆண்டு அரசு விடுமுறை தினமான பக்ரீத் பண்டிகையின்போது  தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அபராதத்துடன் கூடிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்