Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் அடுத்த அதிரடி: மதமாற்ற தடை சட்டம்

ஆகஸ்டு 10, 2019 09:57

புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக்கூடும்  தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும்,  மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் நடைபெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின்படி, இந்த மசோதா எந்தவிதமான மத மாற்றத்தையும் பின்பற்றுவதை தடுக்கும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வில்  30க்கும்  அதிகமான மசோதாக்களை நிறைவேற்றியதால் இது மிகவும் பயனுள்ள அமர்வாக இருந்தது. மக்களவை ஒரே அமர்வில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனையை பதிவுசெய்து உள்ளது.

இந்த அமர்வில்  40 மசோதாக்கள் (மக்களவையில் 33 மற்றும் மாநிலங்களவையில் 7) அறிமுகப்படுத்தப்பட்டன. முப்பத்தைந்து மசோதாக்கள் மக்களவையிலும்  மற்றும் 32 மசோதாக்கள் மாநிலங்களவையிலும்  நிறைவேறின. அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன என கூறப்பட்டு உள்ளது. மக்களவையின் திறன் 137 சதவீதமாகவும், மாநிலங்களவையின் திறன் 103 சதவீதமாகவும் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து  மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா,  முத்தலாக் மசோதா ஆகிய மசோதாக்கள்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் சலசலப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. 

மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதன் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


    
 

தலைப்புச்செய்திகள்